தமிழ்நாட்டிற்கு 'மாஸ்' சம்பவம்.. குறிப்பாக இந்த இடங்கள்.. மழை வெளுக்க போகுது! தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று மற்றொரு மாஸ் நாள் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். மேலும் சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், வட தமிழ்நாடு மற்றும் மதுரை - கொடைக்கானல் அடங்கிய தென் மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த 3 நாடலாக பரவலாக மழை பெது வருகிது. இன்று அதிகாலை கூட சென்னையில் மிதமான மழை பெய்தது. காலையில் பெய்த இந்த மழையால் வெப்பம் இன்றி குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக பகல் வேளையில் கடுமையான வெப்பம் நிலவியது. வெயிலின் தாக்கம் கொடூரமாக இருந்ததன் காரணமாக மக்கள் பகல் வேளையில் வெளியே சென்றால் வியர்வையில் குளிக்கும் அளவு வெயிலின் தாக்கம் இருந்தது. ஆனால், இன்று மதிய வேளையில் கூட சூரியனை வெளியில் காண முடியவில்லை.

மேக மூட்டத்துடன் மழை எப்போ வருமோ என்ற எதிர்பார்ப்புடனே மக்களை வைத்திருக்கிறது. வானிலை. தமிழகம் முழுக்க இன்று பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் தான், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தமிழ்நாட்டில் இன்று பரவலாக மழை இருக்கும் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தனியார் வவானிலை ஆர்வலரான வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: ஒரே வரியில் செல்வது என்றால், தமிழ்நாட்டிற்கு இன்று மற்றொரு மாஸ் நாள். பரவலாக மழை பெய்யும். வட தமிழ்நாடு - வேலூர் - காஞ்சிசிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் வரை மேகங்கள் திரள்கின்றன.
வட உள்தமிழகம் மற்றும் மதுரை - கோடை பகுதிகள் அடங்கிய தென் பகுதியில் இடிமின்னலுடன் மழைக்கு உகந்ததாக உள்ளது. வட தமிழ்நாட்டிற்கு மிகச்சிறந்த நாளாக இருக்க போகிறது. மதுரை - சிவகங்கை - புதுக்கோட்டை பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 08.08.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
09.08.2024 மற்றும் 10.08.2024:: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11.08.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, ஈரோடு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 12.08.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 -40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 13.08.2024 மற்றும் 14.08.2024:: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications