அரக்கோணத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை இங்குதான்!
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தருமபுரி அரூரில் 11 செ.மீ, மோகனூர், நாமக்கல், நீலகிரி, திருப்பூரில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை இருக்கும் என்றும், வரும் 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், 24 ஆம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும், 26, 27 தேதிகளில் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வரும் 27 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கொட்டித் தீர்த்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரில் 11 செ.மீ, மோகனூர், நாமக்கல், நீலகிரி, திருப்பூரில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவாலங்காடு 7 செ.மீ, கும்மிடிப்பூண்டி 6 செ.மீ, பூண்டி 5 செ.மீ, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர் தலா 4 செ.மீ, ஜமீன் கொரட்டூர், தாமரைப்பாக்கம், ஆவடி, ஊத்துக்கோட்டை, சோழவரம் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications