புதுச்சேரியில் 47 செ.மீ மழை.. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்.. பலத்த சேதம்.. வரவழைக்கப்பட்ட ராணுவம்!
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி முழுக்க பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரியில் 47 செ.மீ மழைப் பதிவு! விழுப்புரம் மாவட்டம் மைலத்தில் 50 செ.மீ; கடலூரில் 18 செ.மீ, மரக்காணத்தில் 23.8 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.

பெஞ்சல் புயல் நேற்று இரவு கரையை கடந்தாலும் தற்போது வரை மரக்காணத்தில் பலத்த சூறைக்காற்று வீசுகிறது. காற்றின் வேகம் குறையவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, புதுச்சேரி சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நின்றாலும், தற்போது காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை.
புதுச்சேரியில் மீட்புப் பணிக்கு ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வீடுகளுக்குள் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அண்ணா நகர் முழுக்க நீரில் மூழ்கி உள்ளது. ரெயின்போ காலனி பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணி செய்வது சிக்கல் ஆகி உள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்ததை தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டினை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரி அருகே நேற்று இரவு கரையைக் கடந்த பெஞ்சல் புயல். மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக கடலூரில் விடிய விடிய கொட்டிய கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பலத்த காற்று வீசியதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து, பாதுகாப்பு தடுப்புகள் சரிந்து விழுந்துள்ளன.
இரவு முழுவதும் கனமழை பெய்த காரணத்தால் புதுச்சேரி தத்தளிக்க தொடங்கி உள்ளது. புதுச்சேரி அண்ணாநகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் காஞ்சி, தி.மலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் கரையை கடந்த போதும் உள் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 22 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பெஞ்சல் புயல் இழுத்து வந்த மேகங்கள் காரணமாக இன்று தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications