ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கிய 500 பயணிகள்! உணவு, குடிநீரின்றி கதறல்! களமிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்
தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த ரயில் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ரயிலில் சிக்கியுள்ள பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த நான்கு மாவட்டங்களும் தமிழகத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கிராமப்புறங்களை விட நகர் பகுதிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

போக்குவரத்து: வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தனியார் பேருந்துகள், இந்த மழை வெள்ளம் காரணமாக தென் மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்திருக்கின்றன. எனவே சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களை பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். இன்று காலை 6 மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செமீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செமீ மழையும், திருச்செந்தூரில் 67.9 செமீ மழையும் பதிவாகியுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவு பெருமழையாகும்.
ஐஏஎஸ் அதிகாரிகள்: 4 மாவட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த 4 மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்களும் இன்று இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேநேரம் பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான ஏற்பாடுகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ரயில் சேவை: ரயில் சேவையை பொறுத்த அளவில், சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில், நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில், நெல்லை - சென்னை மற்றும் சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில், திருச்நெந்தூர் - பாலக்காடு, நெல்லையில் இருந்து ஜாம்நகர் செல்லும் ரயில், கன்னியாகுமரி செல்லும் நிஜாமுதீன் விரைவு ரயில் சேவை போன்றவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
Helicopter used to rescue affected people #NellaiRains #NellaiFloods #TirunelveliRains pic.twitter.com/4pkwaBMx2L
— Thinakaran Rajamani (@thinak_) December 18, 2023
ரயில் பயணிகள்: இதில் திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் வரும் 'சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில்', நேற்றிரவு திருச்செந்தூரிலிருந்து திட்டமிட்டபடி புறப்பட்டிருக்கிறது. ஆனால் ரயில் லோகோ பைலட்டால் தண்டவாளத்தை சரியாக பார்க்க முடியவில்லை. எனவே ரயிலை ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தியிருக்கிறார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் ஸ்ரீவைகுண்டத்திற்கு அடுத்து உள்ள சாத்தான்குளத்தில், வெள்ளம் காரணமாக ரயில் தண்டவாளத்தின் அடி பாகம் முழுவதும் அரித்து சென்றிருக்கிறது. கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும், ரயில் பெரும் விபத்திற்கு உள்ளாகியிருக்கும்.
மீட்பு: ரயிலிலிருந்து 100 பேர் மீட்கப்பட்டு அருகில் இருக்கும் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் உணவை விநியோகித்து வருகின்றனர். ஆனால், ரயிலில் இன்னும் 500க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். ரயில் நிலையம் செல்லும் பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மீட்பு பணிக்காக பேருந்துகள் செல்ல முடியவில்லை. எனவே இவர்கள் உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.
மீட்பு பணிகளை பார்வையிட நெல்லை வந்திருந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அபோது ரயில் பயணிகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு விளக்கமளித்த அதிகாரிகள், "ரயிலில் சிக்கியுள்ள பயணிகளுக்கு உணவை உடனடியாக கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோக்கிக்கப்படும். வெள்ளம் வடிந்த பின்னர் ரயிலில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள்" என்று கூறியுள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications