வங்கக் கடலில் மாற்றம்? இன்றும் நாளையும் வெயில் கொளுத்தும்.. 25ம் தேதி வரை மழை இருக்கு, டோன்ட் ஒர்ரி
சென்னை: தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும்நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்தில் வெயில் கொளுத்தும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அத்துடன், வரும் 22, 23-ம் தேதிகளில் சில இடங்களிலும், 24, 25-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
தெற்கு வங்க கடலில் உருவாகும் காற்று சுழற்சி தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடலை நோக்கி நகரும் என்பதால் தென் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் கடந்த 10 தினங்களுக்கு முன்பு காணப்பட்டது.

அதன்படி, மார்ச் 11 ம்தேதிவரை, தூத்துக்குடி நெல்லை, தென்காசி, இராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும், விருதுநகர் மதுரை, தேனி மாவட்டங்களிலும், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் மழைப்பொழிவு தென்பட்டது.
பிறகு, 3 நாட்களுக்கு முன்பு வானிலை மையம் மழை அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில், 23ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
23ம் தேதி வரை மழை தொடரும்
இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 17ம் தேதி முதல் வரும் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவ என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று அதாவது மார்ச் 21 முதல் வரும் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கீழடுக்கு சுழற்சி
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 22, 23-ம் தேதிகளில் சில இடங்களிலும், 24, 25-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். வரும் 26-ம் தேதி வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகப்பட்ச மழைப்பொழிவு பதிவு
தமிழகத்தில் மார்ச் 20-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை, தென்காசி ஆகிய இடங்களில் 4 செ.மீ., குண்டாறு அணையில் 3 செ.மீ., தென்காசி மாவட்டம் ஆயிக்குடி, திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு அணை, விருதுநகர் மாவட்டம் சிவகாசி, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சமவெளிப் பகுதிகளில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 99 டிகிரி, குறைந்தபட்சமாக 70 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயில் இன்றும், நாளையும் கொளுத்தும்
தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் அதிகம் என்று வானிலை மையம் எச்சரித்திருப்பது, பொதுமக்களுக்கு கலக்கத்தை தந்து வருகிறது.. அதாவது, அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications