வங்கக்கடல், அரபிக்கடலில் சுழற்றியடிக்கும் சூறாவளி.. கடலுக்குள் இறங்கியதுமே. மீனவர்களுக்கு போன அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடல், அரபிக்கடல் என 2 கடலிலுமே சூறாவளி வீசுவதால் மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விதிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சபட்ச வெப்பநிலை சூழல் மாறியுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே சில இடங்களில் திடீர் மழை பெய்து வருகிறது.

weather report Rain Tamil Nadu Fishermen

நீலகிரி, கோவை: மலை மாவட்டங்களிலும், கடலோர பகுதிகளிலும் நல்ல பொழிவு காணப்படுகிறது. கடந்த வாரமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தவாறே இருந்தது.. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம், சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. அதன்படி, தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும் என்று கூறியிருந்தது.. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது.

வானிலை மையம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று அதாவது 15ம் தேதி இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இன்றிலிருந்து 18ம் தேதிவரை மழை பொழிவு இருக்கும். அதேசமயம், அடுத்த 4 நாட்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலையும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை மையம் கூறியிருக்கிறது.

தென்மேற்கு பருவமழை, கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும், கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பெய்து வருகிறது.

மேலடுக்கு சுழற்சி: இப்படிப்பட்ட சூழலில், மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. அதில், "தென்மாநிலங்களின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில், ஜூன் 18 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில், ஜூன் 17ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தெற்கு, மத்திய வங்கக்கடல், கேரளா, கர்நாடகா கடலோரம், லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு, 55 கிமீ வேகத்தில் சூறாவளி வீசும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வங்கக்கடல், அரபிக்கடலில் சூறாவளி வீசுவதால் ஜூன் 17 வரை மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருக்கிறது.

எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும் என்பதால், 16ம் தேதி மீனவர்களுக்கு கடலில் செல்ல தடை விதித்திருந்தது வானிலை மையம். இப்போது 55கி.மீ.வேகத்தில் சூறாவளி வீசப்போவதாக எச்சரித்திருக்கிறது.

61 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.. இத்தனை நாளும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுதான் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி உள்ளனர்.. இந்நிலையில், சூறாவளி காரணமாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+