Cyclone Mithili: வங்கக் கடலில் நாளை உருவாகும் புயல் மிதிலி! யார் சூட்டியது தெரியுமா?
சென்னை: வங்கக் கடலில் நாளைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறவுள்ளது என்றும் அதற்கு மிதிலி என்ற பெயர் சூட்டப்படும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 20- ஆம் தேதிக்கு பிறகு தொடங்கியது. இது தற்போது வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய போதே அரபிக் கடலில் தேஜ் என்ற புயலும் வங்கக் கடலில் காற்றழுத்தமும் உருவானது.

தேஜ் புயலால் கேரளா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்தது. குறைந்த காற்றழுத்தத்தால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி காற்றழுத்தம் உருவானது.
இதைத் தொடர்ந்து இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த நிலையில் இன்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்த நிலையில் இது விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 380 கிமீ. தொலைவில் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள துறைமுகங்களில் கப்பல்கள் மற்றும் மீனவர்கள் நலன் கருதி புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. குறிப்பாக எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடலில் நாளை புயல் உருவாகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக உருவாக வலுப்பெறும். இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வரும் 18ஆம் தேதி வங்கதேசத்தில் மோங்லா- கோபுபரா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது புயலாக மாறினால் வடகிழக்கு பருவமழை காலத்தில் தோன்றிய முதல் புயலாகும். மாலத்தீவின் பரிந்துரைப்படி புயலுக்கு மிதிலி என பெயர் சூட்டப்படவுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலின் போது நாளை காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 12 மணி நேரத்திற்கு காற்றானது மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திற்கு வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications