ஐடி கம்பெனிக்குள் மாட்டிக்கொண்ட ஊழியர்கள்.. சுவரில் உருவான நீர் வீழ்ச்சியால் பீதி.. பெங்களூரில்!
பெங்களூர்: பெங்களூரில் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தால் மான்யதா டெக் பார்க் உள்ளிட்ட பெரிய அலுவலகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த டெக் பார்க்கில் உள்ள பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம் வெள்ளம் வடியும் வரை அலுவலகத்தில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெக் பார்க்கின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
ஒரு வீடியோவில், வெள்ளத்தில் சிக்கிய கார்கள் தெரிகிறது. அதே டெக் பார்க் உள்ளே சுவரில் இருந்து பெருமளவு தண்ணீர் கொட்டும் காட்சியும் உள்ளது. இது ஒரு நீர்வீழ்ச்சியைப் போல தோன்றுகிறது. மற்றொரு வீடியோ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியைக் காட்டுகிறது. கார்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் காட்சியும் உள்ளது.

இந்த வீடியோக்களில் ஒன்றை பகிர்ந்த ஒருவர், "மான்யதா டெக் நீர்வீழ்ச்சி" என்று கிண்டல் செய்துள்ளார். அதிகாரிகள் சரியான வெள்ள நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"மான்யதா டெக் பார்க் அமைந்துள்ள பகுதி ஒரு ஏரி," என்று ஒருவர் சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ளார். "மழை பெய்தால் நீர் ஏரியை நோக்கிதானே ஓடும், இது தெரிந்த விஷயம்தானே" என்றும் அவர் கூறினார். டெக் பார்க்கின் வளாகம் நாகவாரா ஏரியின் கரையில் அமைந்துள்ளது. "இது மிகவும் பயமாக இருக்கிறது" என்று மற்றொருவர் கூறினார்.
Manyata Tech Park Waterfalls, inaugurated on 15 October 2024 :)
— Namma Karnataka Weather (@namma_vjy) October 16, 2024
Credit to "Living Temples Of Bharat"#BengaluruRains pic.twitter.com/ben1S9Mjmy
திங்கள்காலையில் தொடங்கிய தொடர் மழையால் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மான்யதா டெக் பார்க்கைத் தவிர, கெடலஹள்ளி ரயில்வே அண்டர்பிரிட்ஜ் மற்றும் RGA டெக் பார்க் சந்திப்பு ஆகியவற்றின் வீடியோக்களும் ஆன்லைனில் வெளியாகியுள்ளன.
இதனிடையே பெங்களூரில் இன்று லேசான தூறல் விழுந்து கொண்டுள்ளது. எனவே தண்ணீர் வடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications