இனி இப்படித்தான்.. 3 மாதம் இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச வெப்பம் பதிவு.. பெங்களூரில் தலைகீழ் மாற்றம்!
பெங்களூர்: பெங்களூரில் வெயில் கொளுத்தி எடுத்து வந்த நிலையில் தற்போது கோடை மழை பெய்கிறது. இதற்கிடையே தான் பெங்களூரில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நேற்று தான் குறைந்த வெப்பநிலை பதிவாகி உள்ளது. அதோடு நடப்பு மே மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளதால் இன்னும் வெப்பம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
பொதுவாக பெங்களூர் குளுகுளு சீதோஷ்ண நிலைக்கு பெயர் பெற்றது. இதனால் தான் பல ஐடி கம்பெனிகளின் தேர்வு என்பது பெங்களூராகவே இருக்கிறது. ஆனால் தற்போது பெங்களூரின் காலநிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதத்தில் அதிக குளிர் இருக்கும். ஆனால் இப்போது குளிர் என்பது குறைந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் பெங்களூர் கடும் வெப்பத்தின் பிடியில் சிக்க தொடங்கியது.
மேலும் பிப்ரவரி மாதம் முதலே வெப்பநிலை படிப்படியாக அதிகரித்தது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிலைமை இனு்னும் மோசமானது. கடும் வெயில் காரணமாக பெங்களூரில் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் தான் தற்போது பெங்களூரில் கோடை மழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக பெங்களூரில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே தான் பெங்களூரில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று பதிவாகி உள்ளது. கோடை மழையின் காரணமாக வெயில் குறைந்து நேற்றைய தினம் 31.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதுதான் மார்ச் மாதத்தில் இருந்து பதிவான குறைந்தபட்ச வெப்பமாகும். இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி கூறுகையில், ‛‛மழை குறைவால் பெங்களூரில் வெப்பம் அதிகரித்தது.
பெங்களூரில் மார்ச் மாதத்தில் குறைந்தபட்ச வெப்பம் என்பது 32.6 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது. ஏப்ரல் மாதத்தில் குறைந்தபட்ச வெப்பம் என்பது 34 டிகிரி செல்சியஸாக இருந்தது. இந்நிலையில் தான் நேற்றைய தினம் குறைந்தபட்ச வெப்பம் என்பது 31.9 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது. இது கடந்த மார்ச் மாதம் முதல் பெங்களூரில் பதிவான குறைந்தபட்ச வெப்பமாகும்’’ என்றார்.
இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் சிஎஸ் பட்டீல் கூறுகையில், ‛‛பெங்களூரில் நகரில் பெய்யும் கோடை மழை என்பது வெப்பத்தை தணித்துள்ளது. அடுத்த வாரம் இன்னும் அதிக மழை பெய்யும். இதனால் வெப்பம் இன்னும் தணியும். கடந்த 1ம் தேதி பெங்களூரில் 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. ஆனால் அடுத்த 10 நாட்களில் நிலைமை மாறிப்போய் உள்ளது.
நேற்றைய தினம் 31.9 டிகிரி செல்சியஸ் தான் பதிவானது. பொதுவாக மே மாதத்தில் பெங்களூர் 128.7 மில்லிமீட்டர் மழை பெறும். நடப்பு மே மாதத்தில் இயல்பை விட அதிக மழையை பெங்களூர் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இது நடக்கும் பட்சத்தில் வெப்பநிலை என்பது இன்னும் குறைய வாய்ப்புள்ளது’’ என்றார்.
-
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications