ரிசல்டை விடுங்க.. மே 1ம் தேதி பெரிய சம்பவம் இருக்கு! வெதர்மேன் கொடுத்த வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியிருக்கிறது. இந்நிலையில், மே 1ம் தேதி முதல் வெயில் அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தனது x பக்கத்தில், "மே 1/2 முதல் உள்நாட்டு, தென் மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் மழை மீண்டும் தொடங்கினாலும், ஆந்திர எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகள் (KTCC - சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள்) கடும் வெயிலில் சுட்டெரிக்கும்.

சென்னை புறநகர் பகுதிகளில் வெப்பநிலை எளிதாக 40°C-ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலூரில் ஏப்ரல் 7, 2026 அன்று பதிவான 42°C மீண்டும் எட்டப்படும் வாய்ப்பு உள்ளது.
எளிய வார்த்தைகளில் சொன்னால், ஆந்திராவுக்கு அருகிலுள்ள பகுதிகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும். கடலோரத்தின் மிகவும் அருகிலுள்ள பகுதிகள் மட்டும் சற்றே தப்பிக்கலாம்.
KTCC மற்றும் வட தமிழ்நாடு மக்கள் கவனிக்கவும்: மே 1/2 முதல் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நேரடி வெயிலில் செல்லாமல் இருக்கவும். எப்போதும் குடை மற்றும் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்" என பதிவிட்டிருக்கிறார்.
அதைப் போல சென்னை, டெல்டா போன்ற கடலோர மாவட்டங்களில் வெயில் அதிகரிப்பதற்கான காரணத்தையும் அவர் விளக்கியிருக்கிறார். தரைக்காற்று கிழக்கு திசையிலிருந்து தற்போது வீசி வருகிறது. கிழக்கு திசை என்பது, வங்கக்கடல் பகுதி. அங்கிருந்து வரும் காற்று, குளிர்ச்சியை கொண்டு வருவதால் கடலோர மாவட்டங்களில் வெயில் குறைவாக தெரியும்.
ஆனால், இந்த காற்று மேற்கு திசை காற்றாக மாறும். இப்படித்தான் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இது நடக்கும்போது, வேலூர், ராயலசீமா, ராணிப்பேட்டை என வெயில் அதிகம் உள்ள மாவட்டங்களிலிருந்து வெப்பத்தை இந்த காற்று கடலோர மாவட்டங்களுக்கு கடத்தும். எனவே கடலோர மாவட்டங்களில் வெயில் மண்டையை பொளக்கும். குறிப்பாக சென்னையில் வெயில் 40 டிகிரி (104 டிகிரி பாரன்ஹீட்) அளவுக்கு பதிவாகும்.
வேலூருக்கு வார்னிங்
ஏற்கெனவே வேலூரில் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டை தொடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இருப்பினும், இந்த வெப்பநிலை மேலும் அதிகரிக்கும். காரணம், ஏப்ரலில் வறண்ட வானிலை நிலவி வந்தது. வானிலை வறட்சியாக இருந்தால், வெயிலின் தாக்கம் பயங்கரமாக இருக்கும். அந்த வகையில் வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல இது எல்-நினோ ஆண்டு. எனவே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கும்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications