சென்னை மக்களே மேம்பாலத்திலுள்ள வண்டிகளை வீட்டுக்கு கொண்டு போலாம்! வெதர்மேன் ஸ்வீட் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு குறைவு என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.. அத்துடன், பலத்த மழைக்கு நிறையவே வாய்ப்புள்ளதாகவும், 18ம் தேதி வரை மழை பெய்யும் என்றும் வெதர்மேன் கூறியிருக்கிறார்.

சென்னையில் இடைவிடாமல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், "சென்னையில் மேகக் கூட்டங்கள் கொஞ்சம் கூட பலவீனமடைந்தாக தெரியவில்லை, மாறாக மேகக் கூட்டங்கள் மேலும் மேலும் அடர்த்தி ஆகி கொண்டு இருக்கின்றன.

chennai tamil nadu weatherman weather

இது யாரையும் பயமுறுத்துவதற்கான பதிவு அல்ல. இடைவிடாது மழை பெய்யும் என்றே தோன்றுகிறது. மேகங்கள் மேலும் மேலும் அடர்த்தியாவதால் குறைந்தது 3 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்யும்.. நாளையும் மழையின் தீவிரம் அதிகரிக்கும்.

கனமழை: சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து சில இடங்களில் 200 மி.மீ மழை பெய்துள்ளது. அண்ணா நகர் போன்ற பகுதிகளில் காலை 8.30 மணி வரை 9 செ.மீ. மழையும், அதன் பிறகும் 9 செ.மீ மழையும் பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 4 மணி நேரத்தில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டு கடற்கரையை இன்னும் நெருங்கவில்லை.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் தீவிரமடையும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக அதிக வாய்ப்பு இல்லை" என்று தெரிவித்திருந்தார்..

சென்னை மக்கள்: இந்நிலையில், இன்று பிரபல சேனல் ஒன்றுக்கு பிரதீப் ஜான் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொல்லும்போது, "இன்று அதி கனமழை பெய்யும் என்று மக்கள் அச்சப்பட தேவையில்லை.. வடசென்னை, திருவள்ளூர் பகுதிகளில் மட்டுமே நேற்றிரவு கனமழை பெய்திருக்கிறது.. எனவே, சென்னைக்கு ஆபத்து இல்லை..

கடந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது.. மிதமான மழை மட்டுமே பெய்துள்ளது.. இன்னும் கொஞ்ச நேரத்துக்கு மழை பெய்யக்கூடும்.. இப்போதைக்கு சென்னை அருகே காற்றழுத்தம் கரையை கடப்பதால், நாளையும், நாளை மறுநாளும் மழை இருக்கும்.. 18ம் தேதியும் மழை இருக்கும்.. மழைக்கான வாய்ப்பு மட்டுமே இருக்குமே தவிர, பெரிய மழை இருக்காது..

நம்பிக்கை தகவல்: இது ரெட் அலர்ட்டா? ஆரஞ்சு அலர்ட்டா? என்பதையெல்லாம் வானிலை மையம்தான் அறிவிக்க வேண்டும்.. ஆனால், எல்லா மழையுமே வெள்ளம் கிடையாது.. முதல் மழையே பெரிய மழையாக வாய்ப்புமில்லை.. எனவே சென்னைவாசிகள் அச்சப்பட தேவையில்லை" என்று பிரதீப் ஜான் நம்பிக்கை தகவலை தெரிவித்துள்ளார்.

பிரதீப் ஜான் தொடர்ந்து சொல்லும்போது, "காற்றுக் குவிப்பு ஆந்திராவின் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. அதனால் மழை மேக ஈர்ப்பால் நிகழும் மழை மட்டுமே சென்னையில் 18 முதல் 20 ஆம் தேதி வரை பெய்யக்கூடும். எனவே, வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களை மக்கள் வீட்டுக்குக் கொண்டு வரலாம். கடந்த 2 நாட்களில் சென்னை, திருவள்ளூரில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சென்னையில் சில இடங்களில் 30 செ.மீ அளவு மழை பெய்துள்ளது என்று கூடுதலாக தெரிவித்துள்ளார் வெதர்மேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+