அடுத்த ஒரு மணி நேரம்.. சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் மழை
சென்னை: தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பம் படிப்படியாக குறைந்து மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் வெயில் நீடிக்கும் என்றும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது என்று கூறியுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேனும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வரும் 3 நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தார். நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக வாட்டி வந்த வெயிலை தணிய வைக்கும் விதமாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறிய அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வேலுர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுவையிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை பல்லாவரம் பகுதிகளில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications