கொங்கு + தென் மாவட்டங்களில் பிளக்கும் வானம்! அடுத்த 2 மணி நேரம் முக்கியம்.. வெளியான வெதர் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வழக்கமாக தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு பருவமழைதான் முதலில் மழையை கொண்டு வரும். அதேபோல இந்த ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் மழை செழிப்பாக தொடங்கியது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல மழையின் அளவு போதுமானதாக இருக்கவில்லை. தமிழ்நாட்டில் ஓரளவு இயல்பாக பெய்தாலும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்த மழை காலை வாரிவிட்டது. மழை குறைந்ததால் கேரளாவில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

கர்நாடகாவின் நீர் பிடிப்புகளில் மழை குறைந்ததால், கிருஷ்ண ராஜ சாகர் உள்ளிட்ட அணைக்கு நீர் வரத்து குறைந்தது. எனவே மேட்டூருக்கு குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீரை நம்பி, டெல்டா மாவட்ட விவசாயிகள் காத்திருந்த நிலையில், கர்நாடகா போதுமான நீரை திறக்காதது பெரும் ஏமாற்றமளித்தது. இப்படியாக தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்தது. இதனையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
அக்டோபரில் தொடங்கிய இந்த மழை, தாராளமாக பெய்தது. தமிழ்நாட்டில் மேட்டூர் தவிர மற்ற அனைத்து அணைகளும் அதன் முழு கொள்ளவை எட்டின. இந்த காலத்தில் வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை ஒட்டி தெற்கு ஆந்திராவில் கரையை கடந்தது. எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதனால் நான்கு மாவட்டங்களும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டன. மறுபுறம் தென் மாவட்டங்களிலும், டிச. 16 மற்றும் 17ம் தேதிகளில் பெய்த கனமழை வரலாறு காணாத வெள்ளத்தை ஏற்படுத்தியது. இதில் சுமார் 40 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதாவது,
நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி , திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications