சட்டென்று மாறிய வானிலை.. அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தான் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், வெயிலுக்கு குட்பை சொல்லும் வகையில் கிளைமேட் மாறியுள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று மாலை சட்டென மாறிய வானிலை என்று சொல்லும் அளவுக்கு திடீரென மேகமூட்டம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 15 மாவட்டங்களில் காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து எடுக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இன்று தான் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. ஆனால் எங்கே வெயில் கொளுத்திவிடுமோ என பயந்த நிலையில் முதல் நாள் அன்றே தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. இதேபோல் சென்னையிலும் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருந்தது.

chance-of-rain-in-15-districts-including-chennai-in-the-next-3-hours-imd-predicts

திடீரென இருட்டாக மாறிய சென்னை

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில் திடீரென கிளைமேட் மாறியது. காலையில் இருந்து பிற்பகல் 3.30 மணி வரை வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் திடீரென மாலை 3.45 மணியளவில் கிளைமேட் தலைகீழாக மாறியது. திடீர் காற்றுடன் மேகமூட்டம் காணப்பட்டு சென்னை இருட்டாக மாறியது.

ஒருசில இடங்களில் புழுதிக் காற்று வீசியது. இதனால் சென்னை மக்கள் அவதியடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெளியில் கிளம்பி சென்ற அவர்கள், மழை பெய்யும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திடீரென கிளைமேட் மாறி மழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பலத்த காற்றுடன் கனமழைக்கு சான்ஸ்

அதாவது தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் 30 - 40 கிமீ வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்காசி, தேனியிலும் மழைக்கு வாய்ப்பு

இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த 3 மணி நேரத்தில் மழையின் காரணமாக ஒருசில இடங்களில் தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கலாம். இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்ட சில நிமிடங்களில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக பூந்தமல்லியில் மழை கொட்டியது. பலத்த சூறைக்காற்றுடன் புழுதிக்காற்று வீசிய நிலையில் தொடர்ந்து மழை பெய்தது.

காற்றுடன் கூடிய மழைக்கு சான்ஸ்

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திங்கட்கிழமை மழை பெய்யும்

குறிப்பாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள், அரியலூர், பெரம்பலூர், கருர், திருச்சிராப்பள்ளி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை 5 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த ஒரு வாரம் எப்படி?

வரும் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 7 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 8 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9 முதல் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் 2 நாட்கள் எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 39 - 40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28- 29° செல்சியஸை ஒட்டியும் இருக்க வாய்ப்பு உள்ளது.

சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 - 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 - 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்க வாய்ப்பு உள்ளது.

மழை அளவு

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவினை பொறுத்தவரை, கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு செமீ மழை பெய்துள்ளது. இதேபோன்று கடலூர் மாவட்டம், மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பவானி பகுதியில் ஒரு செமீ என்ற அளவில் மழை பெய்துள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 41.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதேபோன்று குறைந்த பட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தி சமவெளிப்பகுதியில் 23.0° செல்சியஸ் பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+