அடுத்த 2 மணி நேரம்.. விடாமல் கொட்டப்போகும் மழை.. சென்னை டூ நெல்லை வரை.. 20 மாவட்டங்களுக்கு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 20 மாவாட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், திருப்பத்தூர், வேலூர், சேலம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. சென்னை, தாம்பரம் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை, தாம்பரம், நீலகிரி, சிவகங்கை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தது.

chance-of-rain-in-20-districts-from-chennai-to-nellai-in-the-next-2-hours

சென்னையில் மழை

குறிப்பாக சென்னையில் ஒருசில இடங்களில் இரவு 10 மணியளவில் மழை பெய்தது. இதேபோன்று தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது. இதுபோக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுப்புற பகுதிகளில் இன்று மாலை பலத்த மழை பெய்தது. குறிப்பாக கோட்டையூர், பள்ளத்தூர், கோவிலூர் பகுதிகளில் மழை பெய்தது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது நள்ளிரவு 1 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

20 மாவட்டங்களுக்கு அலர்ட்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கோவை ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

இதேபோன்று திருப்பத்தூர், வேலூர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை ஆகிய 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஒருசில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மீண்டும் கனமழை கொட்டும்

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று (ஜூலை.14) தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை.15ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை.16ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

20 ஆம் தேதி வரை மழை தான்

ஜூலை.17 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை.18ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை.19 மற்றும் 20ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+