சென்னை உள்பட 32 மாவட்டங்கள்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுக்க போகும் மழை.. வானிலை ஆய்வு மையம் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த மாத துவக்கத்தில் இருந்தே பரவலாக பெய்யத் தொடங்கிய மழை தற்போது வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகம் முழுவதுமே நல்ல மழை பெய்து வருகிறது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமன மழை இன்று பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

தமிழ்நாட்டில் நேற்று இரவே பல இடங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மழையால் இந்த பள்ளிகளுக்கு மாவட்டங்களில் விடுமுறையும் அளிக்கப்பட்டது. இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை அவ்வளவாக மழை இல்லை.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,
அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications