டூரெல்லாம் வேண்டாம்.. ‘இந்த’ ஊரெல்லாம் ஊட்டியாக மாறுது..! ஒரு வாரம் தமிழகத்தில் தங்கும் வருண பகவான்!
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 21 ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக இன்று வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்தது வெப்ப அலை காரணமாக அதிக வெப்பநிலை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

அதிகாலை நேரங்களில் வீட்டில் தங்கியிருக்கும் மக்கள் கூட அதீத வெப்பத்தை உணர்ந்தனர். காலை 7 மணிக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் பெண்கள் முதியவர்கள் பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் தான் மக்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்தது கோடை மழை. தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. சொன்னது போலவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், வட மாவட்டங்கள், கொங்கு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. தற்போதும் காலையில் லேசாக வெயில் இருந்தாலும் மாலைக்கு மேல் பலத்த காற்றுடன் பொழிவு இருக்கிறது. இதனால் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 21 ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மலை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக இன்று வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,”தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 19.06.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20.06.2024 மற்றும் 21.06.2024 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19.06.2024 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 17.06.2024 அன்று தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த தேதிகளில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என கூறப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications