பொங்கலுக்கு இருக்குது சம்பவம்.. மழை இன்னும் போகல.. சென்னை டூ தூத்துக்குடி வரை.. வெதர்மேன் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்னும் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதிகளில் மட்டுமே கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் வரும் 12 ஆம் தேதி முதல் 14 தேதி வரை மழை பெய்யும். டெல்டா மற்றும் தென்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது வரை தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. கடந்த 10 நாட்களாக பெரிய அளவில் மழை பெய்யாமல் இருந்த நிலையில், நேற்று திடீரென நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மழை பெய்தது. 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை கனமழை பெய்தது.

rain tamil nadu weatherman pongal 2025 2025


சென்னை வானிலை ஆய்வு மையமும் வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தது. வரும் செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை வருவதால், அதனை கொண்டாட பலரும் தயாராகி வருகிறார்கள். வெளியூர்களின் இருந்தும் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டு வருகிறார்கள். இந்த சூழலில் தமிழகத்தில் பொங்கல் தினத்தன்று மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 4 நாட்கள் மழை தொடரும் என்றும், குறிப்பாக நெல்லை மாவட்டம் மற்றும் குற்றாலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்த 4 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் என்ற தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதிகளில் மட்டுமே கனமழை பெய்யக்கூடும். இந்த மழையெல்லாம் தற்போது மாஞ்சோலை பகுதிகளில் பொதுவானதாக மாறிவிட்டது. சென்னை முதல் டெல்டா மற்றும் தூத்துகுடி வரையிலான கடலோர பகுதிகளிலும் மழை பெய்யும்.

உள்தமிழகத்தில் கூட மழையை எதிபார்க்கலாம். விடுமுறை நாட்கள் பயணத்தை பாதிக்கும் அளவுக்கு மழை இருக்காது. 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை மற்றும் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம். மேலடுக்கு சுழற்சியின் முதல் மழை 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை இருக்கும்.

சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் வரும் 12 ஆம் தேதி முதல் 14 தேதி வரை மழை பெய்யும். இரண்டாவது மழை 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி இருக்கலாம். டெல்டா மற்றும் தென்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்க்கல்பட்டு பகுதிகளில் பெரிய அளவில் மழை இருக்காது. இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+