அடுத்த 1 மணி நேரம்.. சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! வானிலை அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த 1 மணி நேரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் லேசான மழைக்கும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்கள், கோவை, நீலகிரி, சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களான, நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடியில் லேசான மழை தொடர்ந்து பெய்து வந்தது.

chance-of-rain-with-thunder-and-lightning-in-19-districts-including-chennai-in-the-next-1-hour

12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

இதனால் கடந்த 3 நாட்களாக வெயில் இல்லாமல் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது. இன்றும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. மாலையில் நாகை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தான் இன்று இரவும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி, குமரி

இதேபோன்று இரவு 10 மணி வரை நெல்லை, தென்காசி, குமரி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் லேசான இடி மின்னலுட கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் ஒருசில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஓரிரு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அடுத்த ஒரு வார கிளைமேட்

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீண்டும் கனமழை கொட்டும்

வரும் 24, 25 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 26ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

28 ஆம் தேதி வரை மழை தான்

ஜூலை 27ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 28-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் 2 நாட்களுக்கு எப்படி?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 ° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+