சக்கரம் மாறி சுத்துதே.. ஒரே நேரத்தில் டபுள் கிளைமேட்.. குடையை மடக்காதீங்க..வெயில் + மழை தாக்க போகுது
சென்னை: தமிழ்நாட்டில் வருகிற 21ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதேசமயம், வெப்பமும் கொளுத்தும் என்று கூறி, அடுத்த 7 நாட்களுக்கான வானிலையை வெளியிட்டிருக்கிறது சென்னை வானிலை மையம். அந்தவகையில், வரும் ஒரு வாரத்துக்கான வானிலை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 21ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
ஆய்வுகள்: இதனிடையே, ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் இன்னொரு அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்று திசை மாறியதால் தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது 40 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 21ம் தேதி வரை இந்த நிலை தொடரும்.
தென்மேற்கு பருவக்காற்று திசை மாறியதால் தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை 105 டிகிரி பாரன்ஹீட்; அதாவது 40.6 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாகி உள்ளது. இதனால் ஓரிரு நாட்களுக்கு பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கலாம்.
அசவுகரியம்: வெப்பநிலை, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் வெப்பத்தாக்கம் அதிகமாக இருக்கும். மதிய நேரத்தில் வெளியில் செல்வோருக்கு உடல்ரீதியாக அசவுகரியம் ஏற்படலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்!












Click it and Unblock the Notifications