இடி மின்னல்.. இன்று கனமழை வெளுக்கப்போகுது.. 5 மாவட்டங்களுக்கு ‘ஹை அலெர்ட்’ கொடுத்த வானிலை மையம்!
சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கடந்த சில நாட்களாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு ஒடிசா நோக்கி நகரும். பின்னர் மெதுவாக மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் ஜூலை 26ஆம் தேதி (நாளை) வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில், இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் வரும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் மாவட்ட கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், ஆந்திர கடலோர தமிழக பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு, 65 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. அரபிக்கடலில் லட்சத்தீவு, கேரள, கர்நாடக கடலோரம், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு, 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும். வரும், 28ம் தேதி வரை, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லாறில் தலா 11 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 10 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 9 செ.மீ, பந்தலூரில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications