செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட ஊழியர்களுக்கு.. தமிழக அரசு அறிவிப்பு.. உடனே நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 4 மாவட்டங்களிலுள்ள தனியார் நிறுவனங்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை தமிழக அரசு வழங்கி உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.. இந்த மிக்ஜம் புயல் காரணமாக, சென்னையில் மழை கொட்டி வருகிறது.. இதனால், சென்னையே மொத்தமாக முடங்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது..

புயல்: சென்னையை புயல் நெருங்கி வருவதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிலிருந்தே பலத்த மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி புயல் நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்துவிழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.
4 மாவட்டங்கள்: அந்தவகையில், அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை ஒரு நாள் பொது விடுமுறை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் முடிந்தவரை, தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும், தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications