சென்னையில் 2-வது நாளாக அதிகாலை மழைக்கு சான்ஸ்.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்
சென்னை: சென்னையில் நேற்று அதிகாலை பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், இன்று அதிகாலையும் மழைக்கு உகந்த நேரமாக உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்கிறது. இந்த நிலையில் இன்றும்தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நாளை தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது என்றும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ந்தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் வாரம் முழுவதுமே நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபக்கம் இருக்க தலைநகர் சென்னையில் நேற்று அதிகாலை திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், போரூர், கோட்டூர்புரம், தி.நகர், மயிலாப்பூர், எழும்பூர், மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காலை விழித்த பிறகுதான் தண்ணீர் தேங்கி கிடப்பதை பார்த்து பலருக்கும் மழை வந்ததே தெரிந்தது.
பிறகு பகல்வேளைகளில் மழை இன்றி காணப்பட்டது. இந்த நிலையில், இன்று அதிகாலையும் சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளர். தமிழ்நாடு வெதர்மேன் என்ற தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: கும்பகோணம், சீர்காழி, பரங்கிபேட்டை, சிதம்பரம் ஆகிய பகுதிகள் நல்ல மழையை பெற்றுள்ளன.
மேகக்கூட்டங்கள் அரியலூர், பெரம்பலூர் நோக்கி நகர தொடங்கியுள்ளன. சென்னையில் மீண்டும் காலை நேரத்தில் மழை பெய்வதற்கு உகந்த நேரமாக உள்ளது. சென்னையில் அடுத்தடுத்து இரண்டாவது நாளாக காலை நேரத்தில் மழை பெய்யுமா...பார்க்கலாம்.. என்று பதிவிட்டுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications