மிக்ஜாம் புயலின் ருத்ர தாண்டவம்.. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வராதீர்கள்.. மெட்ரோ வார்னிங்
சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயலால் ஆலந்தூர் ரயில் நிலையத்தில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
வங்கக் கடலில் நிலவி வரும் மிக்ஜாம் புயல் புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகல் மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வரக் கூடும். தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகரும். 05-12- 2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னை, திருவள்ளூருக்கு மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால் இன்றைய தினம் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் காற்று அடிப்பது குறைவாகவும் மழை அதிகமாகவும் இருக்கும் என சொல்லப்பட்டது.
இன்று காலை சென்னையை நெருங்கியதால் காற்றும் மழையும் அதிகமாகவே இருந்தது. இதனால் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. மின்சாரம் இல்லை. சென்னைக்கு அருகே 100 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் வரும் போதும் அதிகளவில் மழையை கொடுக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி பரங்கிமலை ரயில் நிலையத்தில் 4 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. ரயில் நிலையத்திற்கு வரும் வழி துண்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வருவதை தவிர்த்துவிட்டு ஆலந்தூர் சென்று ரயில் ஏறுங்கள். இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. பம்பு போட்டு வெளியேற்றினாலும் நீரின் மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
#chennaimetro #ChennaiRains#CycloneMichuang
— Chennai Metro Rail (@cmrlofficial) December 4, 2023
CMRL Michaung cyclone bulletin update:
4 Dec 2023, 6 am:
🚩 There is water logging around St Thomas Mt metro station for 4 ft. Access to enter the station has been cut off. Passengers are advised to avoid the station and instead…
தற்போது பார்க்கிங் ஏரியாவில் தண்ணீரின் அளவு 4 அடியாக இருக்கிறது. அங்கு சிலரது வாகனங்கள் உள்ளன. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் முன்பும் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. ரோகிணி தியேட்டர் பக்கம் இருக்கும் மேம்பாலம் வழியாக கோயம்பேடு ரயில் நிலையத்தை அடையலாம்.
ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. அங்கு செல்லவும் சிரமங்கள் இருக்கும். மற்ற ரயில் நிலையங்களில் செல்ல முடியும். அங்கெல்லாம் குறைந்த அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. காலை 5 மணி முதலே ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். இவ்வாறு மெட்ரோ ரயில் நிலையம் கொடுத்துள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications