சென்னைக்கு சம்பவம் இருக்கு.. வங்கக்கடலில் புயல் சின்னம்! இந்திய வானிலை மையம் வார்னிங்
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று முதல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மழை தீவிரமடையும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது அடுத்தடுத்த நாட்களில் வலு பெற்றால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

காற்றழுத்த தாழ்வு பகுதிகள் என்பது புயலுக்கான தொடக்க நிலையாகும். இது படிப்படியாக 4 நிலையாக வளர்ந்து, இறுதியில் புயலாக மாறுகிறது.
1. காற்றழுத்த தாழ்வுப் பகுதி
2. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
3. காற்றழுத்த தாழ்வு மண்டலம்
4. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
5. புயல்
காற்று சூடாவதன் மூலம் லேசான நிலையை அடைகிறது. இதனால் இயல்பாகவே மேலே எழும்புகிறது. இப்படி நடக்கும் பகுதியில் அழுத்தம் குறைவாக இருக்கும். அழுத்தம் குறைவாக இருப்பதால், மற்ற பகுதியிலிருக்கும் காற்று, இந்த இடத்தை நோக்கி வேகமாக நகரும். இதன் மூலம் அழுத்தம் சமநிலையை எட்ட முயற்சிக்கும். இப்படியாக அதிக அளவில் காற்றும், அத்துடன் சேர்ந்து மேகங்களும் ஓரிடத்தில் குவிந்து, சுழலாக மாறும். இங்கு காற்றின் வேகம் மணிக்கு 31 கி.மீ என இருக்கும்.
இந்த வேகம் அதிகரிக்கும்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது. அதாவது மணிக்கு 49 கி.மீ வேகத்தில், காற்று சுற்றும். இதில் அழுத்தம் இன்னும் குறையும்போது அதுவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. இந்த கட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு 61 கி.மீ என இருக்கும். இதன் மையப் பகுதியில் காற்றின் சுழற்றி தெளிவாக தெரியும். இது நிலைக்கொண்டிருக்கும் பகுதியில் கனமழை பரவலாக பெய்யும். இறுதியாக காற்றின் வேகம் 62 கி.மீக்கும் அதிகமாக போகும்போது அது புயலாக வலுப்பெறுகிறது.
புயல் உருவானால், அதன் கண் நன்கு தெரியும்படி இருக்கும். இது நிலைக்கொண்டிருக்கும் பகுதியில் காற்றின் வேகம் கடுமையாக இருக்கும். கனமழையும், வெள்ளமும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications