இடி + மின்னல்.. இரவில் திடீரென மாறிய கிளைமேட்.. சென்னையில் பல இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சிட்டி மற்றும் புறநகர் பகுதியில் இன்று இரவு திடீரென்று கனமழை பெய்து வருகிறது. இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்குவதால் சாலைகளில் தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது.

தமிழகம் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், கடலோர மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதல் பல இடங்களில் வெயில் அடித்தது.

chennai rain weather

மேலும் சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் மாலை, இரவு வேளைகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்தது.

அதன்படி இன்று இரவில் திடீரென்று சென்னையில் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. இரவு 9.45 மணி முதல் சென்னை மற்றும் புறநகரில் பல இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.

முதலில் மெதுவாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல அதிகரித்து தற்போது வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி சென்னை சிட்டியை பொறுத்தமட்டில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அயனாவரம், மாதம்பாக்கம், ராயப்புரம், முகப்பேர், அண்ணாநகர், அரும்பாக்கம், கோயம்பேடு, எண்ணூர், தண்டையார்பேட்டை, வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராயநகர், வள்ளுவர் கோட்டம், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், மற்றும் அதனை சுற்றிய இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

மேலும் ராயபுரம், முகப்பேர், அண்ணாநகர், அரும்பாக்கம், கோயம்பேடு, எண்ணூர், தண்டையார்பேட்டை, வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராயநகர், வள்ளுவர் கோட்டம், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம் மற்றும் அதனை சுற்றிய பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், அனகாபுத்தூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கி உள்ளது. இதனால் பல இடங்களில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+