அதுக்குள்ளவா? சென்னைக்கு வந்த புது அலர்ட்.. அடுத்த 48 மணிநேரம் முக்கியம்! இடி மின்னலோடு மழை வாய்ப்பு
சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை அதிகமாக பாதிக்கப்பட்டது. தற்போது பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ள நிலையில் அடுத்த 48 மணிநேரத்தில் சென்னையில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானது. இதனால் சென்னையில் கடந்த 3ம் தேதி முதல் 4ம் தேதி வரை இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. விடியவிடிய கொட்டிய கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது.
குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 5ம் தேதி முதல் மழை என்பது சென்னையில் பெய்யாத நிலையில் மீட்பு பணி என்பது தீவிரமாக நடந்தது. இதனால் தற்போது சென்னையில் வெள்ளம் பாதித்த பெரும்பாலான இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.
இருப்பினும் கூட இன்னும் சில இடங்களில் மழை வெள்ளம் என்பது முழுவதுமாக வடியவில்லை. அந்த இடங்களில் தண்ணீரை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னையில் மழை இல்லாவிட்டால் விரைவில் தண்ணீர் அகற்றப்பட்டு 100 சதவீதம் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும். ஆனால் மழை பெய்தால் மீண்டும் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தான் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கான வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது. இதுதொடர்பாக இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டி மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இதனால் தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை என்பது 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போது தான் சென்னையில் மழை வெள்ளம் என்பது வடிந்து வரும் நிலையில் அடுத்த 48 மணிநேரத்தில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications