சென்னையின் முக்கிய பகுதியில் வடியாத மழைநீர்.. காரணம் இதுதான்.. மாநகராட்சி ஆணையர் கொடுத்த விளக்கம்!
சென்னை: சென்னையின் சில பகுதிகளில் மழை நீர் தேங்கியது ஏன்? என்பது பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதோடு, வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டது.

அதன்படி நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. சென்னை நகரில் நேற்று இரவு 7 மணி முதல் இடைவிடாமல் பெய்த கனமழையின் காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனை வெளியேற்றும் வேலையில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சென்னை நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, மழைநீரை அகற்றும் பணிகளை துரிதப்படுத்தினர். மேயர் பிரியா நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பயனாக, பெரும்பாலான இடங்களில் தேங்கி இருந்த மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் மழைநீர் பாதிப்புகளை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இரவோடு இரவாக களத்தில் இறங்கிய சென்னை மேயர் பிரியா! அதிகாரிகள் வேகம்.. பெரும்பாலான இடங்கள் உடனே பளிச்
அப்போது பேசிய அவர், சென்னையில் 145 இடங்களில் நீர் தேங்கிய நிலையில் 68 இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் எந்த சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை. மழை பெய்யும்போது தண்ணீர் தேங்குவது உண்மை. அதே போல தற்போது விரைவாக வெளியேற்றபடுவதும் உண்மை. மழை விட்டபிறகு தண்ணீர் வடிந்துவிட்டது. 16 ஆயிரம் ஊழியர்கள் இரவு பகல் பார்க்காமல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு மாம்பலம் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதற்கு மாம்பலம் கால்வாயில் உள்ள பிரச்சனையே காரணம். சென்னையில் மாம்பழம் பகுதியில் இருந்து வரும் மழைநீர், அடையாறு வழியாக வங்காள விரிகுடாவிற்கு செல்லும். ஆனால், அடையாறு ஆற்றுக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்படுவதன் காரணமாக மழைநீர் அதிகமாக வந்து தேங்கும் நிலை உருவாகி உள்ளது.
தற்போது அதிகாரிகளிடம் கூறி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீரை தற்போது திறந்து விட வேண்டாம் என கூறியுள்ளோம். அதன் காரணமாக தியாகராய நகர் பகுதியில் மிக விரைவாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்போதைக்கு ரங்கராஜபுரம் பகுதி சுரங்கப்பாதை மட்டுமே நீரில் மூழ்கியுள்ளது.
மாநில அரசு மழைநீர் வடிகால் பணிக்கு நிறைய நிதி ஒதுக்கியுள்ளார்கள். அதனால், பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் பெருமளவில் நிறைவு பெற்று மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அமைச்சர்கள் களத்தில் இருந்து வேலை செய்து வருகின்றனர். சென்னை மெட்ரோ மழைநீர் வடிகால் இயந்திரங்கள் 24 மணிநேரமும் இயங்கி வருகிறது எனவும் மாநகராட்சி அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications