சென்னையில் வெள்ளம்.. 2015 திரும்புது! ‘சூப்பர் எல் நினோ’ எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
சென்னை: கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் உருவான வெள்ளத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். அதுபோன்று மீண்டும் வெள்ளம் ஏற்படும் என்றும் கனமழையின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்கு காரணம் சூப்பர் எல் நினோ என்றும் கூறியிருக்கிறது.
வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை பொழியும் தென்மேற்குப் பருவமழை, இந்த ஆண்டு எல் நினோ தாக்கத்தால் வெறும் 35% மட்டுமே பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 60% விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம்.

சூப்பர் எல நினோ என்றால் என்ன?
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர், வழக்கத்தை விட அதிக வெப்பமடைவதைக் குறிக்கும் ஒரு வானிலை நிகழ்வு. இதில் 'சூப்பர் எல் நினோ' என்பது அந்த வெப்பமயமாதல் மிகத் தீவிரமான நிலையை எட்டுவதைக் குறிக்கிறது. அதாவது, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில், கடல் நீரின் வெப்பநிலை சராசரியை விட 2°C அல்லது அதற்கு மேல் உயரும்போது அது 'சூப்பர் எல் நினோ' என அழைக்கப்படுகிறது. சாதாரண எல் நினோவை விட இது அதிக ஆற்றல் வாய்ந்தது.
சென்னைக்கு ஏன் ஆபத்து?
வழக்கமாக எல் நினோ ஏற்பட்டால் இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை (ஜூன் - செப்டம்பர்) பொய்த்துப் போகும், வறட்சி ஏற்படும். ஆனால், வடகிழக்குப் பருவமழை (அக்டோபர் - டிசம்பர்) காலங்களில் இது தலைகீழான விளைவை ஏற்படுத்தும்
1997-98 மற்றும் 2015-16 ஆண்டுகளில் தான் உலகம் கடைசியாகக் கடுமையான 'சூப்பர் எல் நினோ' பாதிப்புகளைச் சந்தித்தது. 2015-ல் சென்னையில் பெய்த வரலாறு காணாத மழைக்கு இந்தச் சூப்பர் எல் நினோ ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. தற்போது மீண்டும் அதே போன்ற சூழல் உருவாவதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
சென்னைக்கு ஆபத்து
குறிப்பாக, இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை (ஜூன் - செப்டம்பர்) வழக்கத்தை விடக் குறைவாக இருக்கும் என IMD கணித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்திலேயே இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல்முறை. பற்றாக்குறையாக இருக்க 35% வாய்ப்பும், இயல்பை விடக் குறைவாக இருக்க 31% வாய்ப்பும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
IMD சொல்வது என்ன?
பசிபிக் பெருங்கடலில் தற்போது நிலவும் 'லா நினா' சூழல் மாறி, ஜூன் மாதத்திற்குள் 'எல் நினோ' நிலைக்கு மாறும் என IMD உறுதி செய்துள்ளது. பருவமழையின் இரண்டாம் பாதியில் (ஆகஸ்ட் - செப்டம்பர்) இதன் தாக்கம் மிகத் தீவிரமாக இருக்கும்.
எல் நினோ தீவிரமடையும் போது, அது வடகிழக்குப் பருவமழையைத் தூண்டி சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் அதிதீவிர மழையைத் தரும் என்பதால், இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை.. சென்னைக்கும் அலர்ட் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications