மந்தைவெளியில் வடிந்த வெள்ளம்.. சகதியாக மாறிய சாலை.. களமிறங்கிய எஸ்.வி சேகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை வெள்ளம் சென்னையின் நகருக்கு பல பகுதிகளை புரட்டி போட்டு விட்டது. வெள்ள நீர் வடிந்த பின்னரும் சேரும் சகதியுமாக சாலைகள் மாறியுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மந்தைவெளியில் தனது வீட்டின் அருகே வெள்ளம் வடிந்த பின்னர் சாலையை சுத்தம் செய்துள்ளார் நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி சேகர்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வேளச்சேரி, முடிச்சூர், பள்ளிக்கரனை மற்றும் வட சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் வீடு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

Chennai Flood Manthaveli road turned into mud SV Shekher post on X page

மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையான உணவு, தண்ணீர், பால் போன்றவை கிடைக்காமல் மக்கள் கடந்த 4 நாட்களாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மயிலாப்பூரை சுற்றியுள்ள பிருந்தாவன் தெரு, தேவடி தெரு, ஆர்.கே.மடம், கபாலீஸ்வரர் கோயில், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. அதே போல மந்தைவெளியில் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. 3 நாட்களாக வெயில் அடித்ததால் வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகிறது. வெள்ளநீர் வடிந்தாலும் பல பகுதிகளிலும் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

தூய்மை பணியாளர்களுக்கு இந்த சகதிகளை அகற்றுவதுதான் சவாலான பணியாக உள்ளது. சென்னையை தூய்மை படுத்த வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில் மந்தைவெளியில் தனது வீட்டின் அருகே வெள்ளநீர் வடிந்த பின்னர் சேரும் சகதியுமாக மாறியுள்ள சாலையை நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி. சேகர் சுத்தம் செய்தார். அதனை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எஸ்.வி. சேகர். அவரது பதிவிற்கு பலர் பாராட்டினாலும் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+