காரை எடுத்துக்கொண்டு.. கூவத்திற்கே போன ஸ்டாலின்.. முகத்துவாரத்தில் வைத்து சொன்ன வார்த்தை.. முக்கியம்
சென்னை: சென்னையில் கூவம் ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மொத்தமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அறிக்கை அளிக்கவும் அதிகாரிகள், அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னர், கடந்த இரண்டு நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள 'மிக்ஜாம்' புயல் காரணமாக, தொடர்ந்து பெய்துவந்த வரலாறு காணாத மழையால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இந்த புயல் மழையின் தாக்கம் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது.

முக்கிய உத்தரவு: மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியான தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
( ஐடி விங்கை களமிறக்கி.. நொடிக்கு நொடி உதவி.. சென்னையை இணையத்தின் மூலம் காக்கும் டிஆர்பி.. சபாஷ்!)
முன்னதாக, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும், வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் 1.12.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்கினார்.
ஆய்வு செய்தார்; அதனைத் தொடர்ந்து, 2.12.2023 அன்று சென்னை, எழிலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததையொட்டி மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் பொதுமக்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, 3.12.2023 அன்று சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார், என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

முகத்துவாரம்; சென்னையில் கூவம் ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். அங்கே அவர் பார்வையிட்ட போது அவருடன் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உடன் இருந்தார். அப்போது அவரிடம் முதல்வர் ஸ்டாலின்.. இங்கே தான் தண்ணீர் செல்வதில் சிக்கல் இருந்துள்ளது.
இதனால் தண்ணீர் வெளியேறாமல் சிட்டிக்குள் தண்ணீர் இருந்துள்ளது. வரும் காலத்தில் இப்படி நடக்க கூடாது. இந்த முறை தண்ணீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இப்படி நடக்க கூடாது. அதற்கான பணிகளை வெள்ள நிவாரணம் முடிந்ததும் செய்ய வேண்டும் என்று உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications