ஐடி விங்கை களமிறக்கி.. நொடிக்கு நொடி உதவி.. சென்னையை இணையத்தின் மூலம் காக்கும் டிஆர்பி.. சபாஷ்!
சென்னை: சென்னை வெள்ளத்திற்கு இடையில் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் பணிகள் அதிகம் கவனிக்கப்பட்டு உள்ளது.
சென்னையை உலுக்கி உள்ள புயலில் பலர் மீட்பு பணிகளை செய்து வருகின்றன. மொத்த அரசு நிர்வாகமும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் அரசின் மீட்பு பணிகள் நடக்க இன்னொரு பக்கம் தன்னார்வலர்களும் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா, சுப்பிரமணியன், சேகர் பாபு என்று எல்லோரும் களத்தில் நின்று பணிகளை செய்கின்றனர். இன்னொரு பக்கம் எம்பி தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா ஆகியோரும் களத்தில் பணிகளை செய்து வருகின்றனர். இந்த பணிகளுக்கு இடையே அதிகம் கவனிக்கப்பட்டது தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாதான்.
அவரின் பணிகள்.. இணையம் மூலம் அவர் உதவிகளை ஒருங்கிணைத்தது.. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரச்சனைகளை சரி செய்த விதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.

மக்களை மனதை வென்ற டிஆர்பி ராஜா: இதில் டிஆர்பி ராஜா முக்கிய பணி நெட்டிசன்களில் பிரபலமானவர்கள், கட்சி நிர்வாகிகள், எதிர்க்கட்சி தரப்பினர், பொதுமக்கள் எல்லோரும் வைக்கும் கோரிக்கைகளை உடனுக்குடன் பதிவிட்டு அதற்கு உரிய உதவியை பெற்று தருவதுதான். அவரால் நேரடியாக உதவ முடிந்த விஷயங்கள்.. அவரிடம் உள்ள காண்டாக்ட்ஸ் மூலம் செய்யப்படும் உதவிகள், சென்னை மாநகராட்சி மூலம் செய்யப்பட கூடிய உதவிகளை பிரித்து எல்லா உதவிகளை செய்து முடித்ததது கவனிக்க வேண்டிய விஷயம்.
( மிக்ஜாம் புயல்.. தமிழ்நாடு அரசு எவ்வளவு நிவாரணம் வழங்க திட்டம்? ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு?)
உடனுக்குடன் பதில்: இத்தனைக்கும் இடையில் நெட்டிசன்கள் வைக்கும் கோரிக்கைகள்.. கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் அளித்து வருகிறார். அவர் செய்த பணிகளை குறிப்பிட வேண்டும் என்றால்.. ஒரு நபர் வேளச்சேரியில் இருந்து உதவி கேட்கிறார் என்றால்.. உடனே ஜிசிசி அதாவது சென்னை மாநகராட்சியை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களால் அங்கே செல்ல முடியுமா என்பதை டிஆர்பி சோதனை செய்கிறார். அங்கே அதிகாரிகள் இல்லாத பட்சத்தில் கட்சி நிர்வாகிகள், ஐடி விங் ஆட்களை அனுப்புகிறார்.

களத்திலும் வேலை; அதுவும் இல்லாத பட்சத்தில் களத்தில் உள்ள தனக்கு நெருக்கமான தன்னார்வலர்கள் மூலம் நேரடியாக பணிகளை செய்து உதவிகளை மக்களுக்கு கொண்டு செல்கிறார். இப்படிபட்டத்தான் பணிகளை டிஆர்பி ராஜா ஒருங்கிணைத்து வருகிறார்.
திமுக ஐடி விங்: இதோடு நிற்காமல்.. திமுக ஐடி நிர்வாகிகளை கட்சி ஐடி விங் மீட்பு பணிக்கு பயன்படுத்துவதோடு நிற்கலாம் நேரடியாக நிர்வாகிகளை பணிக்கு இறக்கி மீட்பு பணிகளை கவனித்து வருகிறார். இதன் மூலம் பல ஆயிரம் நிர்வாகிகளை ஒரே நேரத்தில் எளிதாக உதவிக்கு பயன்படுத்த முடிகிறது .
அரசின் அப்டேட் உடனுக்குடன்: இதேபோல் அரசின் அறிவிப்புகளையும்உடனுக்குடன் டிஆர்பி ராஜா அப்டேட் செய்து வருகிறது. மின்சாரம் எப்போது வரும்.. எங்கே இன்று மீட்பு முகாம்கள் நடக்கின்றன.. அதிகாரிகள் எங்கே செல்கின்றனர் உள்ளிட்ட அப்டேட்களையும் கூட உடனுக்குடன் மக்களுக்காக வழங்கி வருகிறார்.

வெள்ள நிலவரம்: சென்னையில் பெரும்பாலான இடங்களில் தற்போது வெள்ளம் வடிந்துள்ளது. முக்கியமாக நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை வெள்ளம் இன்றி காணப்படுகிறது. அதேபோல் சாலையின் உட்பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது.
ஆனால் ஒரு சில ஏரியாக்கள் இன்னும் வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவில்லை. மடிப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், ஐடி ஏரியா பகுதிகள் மொத்தமாக இன்னும் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. இந்த பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்கவில்லை. இப்போதும் சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கே வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications