மிக்ஜாம் புயல்.. தமிழ்நாடு அரசு எவ்வளவு நிவாரணம் வழங்க திட்டம்? ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு?
சென்னை: சென்னையில் கனமழை காரணமாகவும், மிக்ஜாம் புயல் காரணமாகவும் மக்களுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.
சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்குக் கடிதம்
இந்தக் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமர் அவர்களிடம் நேரில் வழங்குவார்.

தமிழ்நாட்டில் 'மிக்ஜாம்' புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திரமோடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (5-12-2023) அன்று கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய 'மிக்ஜாம்' புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
எவ்வளவு கோரிக்கை: சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ. 5,060 உடனடியாக வழங்கிடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
( 2023 ரொம்ப முக்கியம்! தமிழ்நாடு வெதர்மேன் சென்னைக்கு சொன்ன முக்கிய அப்டேட்.. நோட் பண்ணுங்க!)
மேலும், 'மிக்ஜாம்' புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக்கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது என்றும், முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட ஒன்றிய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மிக்ஜாம் புயல் சேதம்: சென்னையில் கனமழை காரணமாகவும், மிக்ஜாம் புயல் காரணமாகவும் மக்களுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை என்றாலும் கண்டிப்பாக இந்த நிதி உதவி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதன்படி குடும்பங்களுக்கு 1000-2000 ரூபாய் வழங்கப்படும். அதிகம் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 4 ஆயிரம் வரியா நிவாரணம் வழங்கப்படும் என்று தகவல்கள் வருகிறது. இது பொது நிவாரணம். ரேஷன் கடைகளில் பொதுவாக கொடுக்கப்படும். இது போக மரணம், தீவிர பொருட் சேதங்களுக்கு கூடுதல் நிவாரணம் முன் கூட்டியே அளிக்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன.
வெள்ள நிலவரம்: சென்னையில் பெரும்பாலான இடங்களில் தற்போது வெள்ளம் வடிந்துள்ளது. முக்கியமாக நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை வெள்ளம் இன்றி காணப்படுகிறது. அதேபோல் சாலையின் உட்பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது.
ஆனால் ஒரு சில ஏரியாக்கள் இன்னும் வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவில்லை. மடிப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், ஐடி ஏரியா பகுதிகள் மொத்தமாக இன்னும் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. இந்த பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்கவில்லை. இப்போதும் சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கே வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications