வெள்ள பாதிப்பு.. கொளத்தூருக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி
சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கொளத்தூரில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
மிக்ஜாம் புயல் கரையை கடந்து சென்றுவிட்டாலும், புயலின் தாக்கம் இன்னமும் சென்னையை விட்டு அகலவில்லை. சென்னையில் பல்வேறு இடங்களில், சாலைகள், குடியிருப்புகள் என அனைத்து பக்கமும் மழைநீர் சூழ்ந்துள்ளது. புயல் சென்னையை கடந்து செல்லும்போது இருந்ததைவிட தற்போது குறைந்திருந்தாலும், இன்னமும் முழுதாக தண்ணீர் வடிந்துவிடவில்லை. இதனால் வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதேபோல் சென்னையில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலையில் தென்சென்னை பகுதியில் வடசென்னை பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் வெள்ளநீர் தேங்கியுள்ள இடங்களை பார்வையிட்டு தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேகொண்டார். அப்போது அவருடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோரும் உடன் இருந்தனர். எங்கெங்கு மழைநீர் தேங்கி இருக்கிறது என்றும், தேங்கி இருக்கும் இடங்களில் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தவிட்டார். இதனை தொடர்ந்து வட சென்னை மக்களுக்கு நிவாரண பணிகளையும் வழங்கினார்.
கொளத்தூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் அதனை வாங்கி சென்றனர். புளியந்தோப்பு, கொளத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதி மக்களையும் ஸ்டாலின் சந்தித்து வருகிறார். மேலும் உடனுக்குடன் நிவாரண பணிகளை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications