நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் சதம் அடித்த மழை.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த டேட்டா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மழை சதம் அடித்துள்ளது. ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய பகுதிகளில் 100 மி.மீக்கு மேல் மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

Chennai Weather rain

இந்தநிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர், அடையார், மந்தைவெளி, எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

சென்னையில் இன்று அதிகாலை முதல் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

"சென்னையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மழை சதம் அடித்துள்ளது. மழைக்குப் பிறகு இப்போது சுட்டெரிக்கும் வெயில். 22.08.2025 இன்று காலை 8:30 மணிக்கு ரேடாரில் பதிவான 24 மணி நேர மழைப்பொழிவு இங்கே. சென்னை நகரத்திற்கும் ECR பெல்ட்களுக்கும் சரியான மழை." எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று அதிகாலை வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில், "சென்னையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒரு மேகம் கூட இல்லை. ஆனால் தற்போது எப்படி மொத்த வானிலையும் மாறியிருக்கிறது என்று பாருங்கள். மழை மேகங்கள் நகராமல் அப்படியே நின்ற வண்ணம் உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 50 மில்லி மீட்டர் மழை அளவை விரைவில் எட்டிப் பிடிக்கப் போகிறது" என்று தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+