சூறைக்காற்று + கனமழை.. சென்னையில் இரவில் வெளுத்து வாங்கும் மழை! மின்தடை - வாகன நெரிசலால் அவதி
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் இதமான சூழல் நிலவும் நிலையில் நள்ளிரவிலும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பல இடங்களில் மழை பெய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் சாரல் மழை தொடர்ந்து பெய்யும்.

ஆனால் தற்போது சாரல் மழை என்பது அவ்வப்போது மட்டும் லேசாக பெய்து வருகிறது. அதேபோல் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அவ்வப்போது மட்டும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் கணித்து இருந்தது. இத்தகைய சூழலில் தான் இன்று இரவு சென்னையின் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்ட தொடங்கி உள்ளது. இரவு 8.30 மணி முதல் லேசாக பெய்ய தொடங்கிய மழை தற்போது வரை தொடர்ந்து பெய்து வருகிறது.
சென்னை அண்ணாநகர், கோயம்பேடு, கிண்டி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, எல்ஐசி, சேப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், தியாகராஜ நகர், வடபழனி, சிந்தாதிரிபேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது
அதே போல தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்று கடுமையாக வீசியதால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். அதேபோல் டூவீலர்களில் சாலையில் சென்றவர்களும் பிரச்சனையை சந்திக்க தொடங்கினர்.
அதோடு இன்று வெள்ளிக்கிழமையாகும். இதனால் ஐடி ஊழியர்கள் உள்பட பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பறப்பட்டனர். இதனால் சென்னை அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழைக்கு நடுவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் கார்களில் பயணித்தவர்களும் பிரச்சனையை சந்தித்தனர்.
இதற்கிடையே தான் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை உள்பட 29 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட 28 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications