மதியம் 1 மணி வரை மழை விடாது.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தில் மேக மாறுபாடு காரணமாக சென்னையில் நேற்று விடியற்காலை திடீரென பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நேற்று காலை ஓக்கியம் துரைப்பாக்கத்தில் 12 செ.மீ மழையும், ஈஞ்சம்பாக்கம் மற்றும் ஆர் ஏ புரத்தில் 11 செ.மீ மழையும், அடையாறில் 10 செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 5 செ.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 3 செ.மீ மழையும் பதிவானது.

இந்த நிலையில், சென்னையில் இன்றும் அதிகாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சென்னையில் அதிகாலையில் வேலைக்குச் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், மறைமலைநகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நல்லிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் பல்வேறு இடங்களில், மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது பகல் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Light to Moderate Rain is likely to occur at isolated places over Chengalpattu, Chennai, Kancheepuram, Thiruvallur, Nagappattinam and Ramanathapuram in next 3 hours. pic.twitter.com/j9U2h3Lo30
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) August 23, 2025
"சனிக்கிழமைக்கு பிறகு மழையின் அளவு குறைய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி வாக்கில் வடமேற்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது ஈரப்பதத்தை இழுத்து, மழையை அந்த பகுதியை நோக்கி நகர்த்தும். இதனால் சென்னையில் மழை குறையும். அதிகாலை மழைக்கு ஆழ்ந்த வெப்பச்சலனமே காரணம். இது கடற்கரை பகுதிகளில் மழையின் தீவிரத்தை அதிகரித்தது" என வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
-
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications