Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் இடியுடன் மழை வெளுத்தெடுக்கும்.. வானிலை மையம் விடுத்த அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. இரவு 11.30 மணிக்கு கரையைக் கடந்தது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனையடுத்து ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று காலை 11.30 மணியளவில் வலுவிழந்தது.

rain cyclone fengal

எனினும் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். நீர் நிலைகள் நிரம்பி, ஊருக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பல மாவட்டங்களில் வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இன்றும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கனமழை காரணமாக இன்று (டிசம்பர் 2) திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் வேலூர், சேலம், திருப்பத்தூர், தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதோடு மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, கூடலூர், கோத்தகிரி வட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “அடுத்த மூன்று மணி நேரத்தில் அதாவது இன்று (டிசம்பர் 2) காலை 10 மணிக்குள் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+