காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழை! லிஸ்டுல உங்களுக்கு வாய்ப்பிருக்கானு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த மார்ச் மாதம் முதலே தகித்து வருகிறது. இதனால் ஏப்ரல் மாதத்தில் வெப்பம் 110 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Chennai Meteorological Department says that 13 districts will get rain


இந்த நிலையில் மே 4 ஆம் தேதி முதல் கத்தரி வெயில் ஆரம்பித்தது. இதனால் மேலும் வெப்பம் தகித்தது. எனினும் வேலூர், ஊத்தங்கரை உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழையும், தருமபுரி, கோவை உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்தது.

இதனால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் தணியும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் கிழக்கு திசையிலிருந்து கடலில் இருந்து காற்று வீசுவதாலும் அவ்வப்போது மழை பெய்வதாலும் வெப்பம் தணியும் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வரும் மே 12 அல்லது 13 தேதிகளில் இலங்கை அல்லது குமரி கடலையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாத இறுதியில் காற்றழுத்தம் ஒன்று உருவாக வாய்ப்பு என சொல்லப்பட்டுள்ளது.

அது போல் ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் இதனால் வெப்பம் படிப்படியாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அது போல் கடந்த வியாழக்கிழமையும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் சென்னையின் பொத்தேரி, காட்டாங்குளத்தூர், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திலும் அனுமந்தபுத்தேரி, ராமபாளையம், வேதாசல நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் காலை 10 மணிக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, சிவகங்கை, விழுப்புரம், கடலூர் ,மயிலாடுதுறை, தஞ்சை, நாகை புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+