சென்னையை சுத்துப்போட்ட மழை.. இனிதான் சம்பவமே இருக்கு! உஷார் மக்களே!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மட்டுமல்லாது இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கொஞ்சம் தீவிரமாகவே இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையின் புறநகர் பகுதிகளான கோயம்பேடு, பாடி, கொளத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், நகர் பகுதிகளான வில்லிவாக்கம், அயனாவரம், புளியந்தோப்பு, பேசின் பாலம், கொருக்குப்பேட்டை, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது.

முன்னதாக தமிழ்நாடு வெதர்மேன் சென்னை வானிலை குறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், "இன்று பகல் நேரங்களில் வெயில் இருக்கும் ஆனால் திடீரென்று எதிர்பாராத விதமாக மழையும் பெய்யும் குறிப்பாக மாறி அல்லது இரவு நேரங்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது எனவே வெயிலாக இருந்தாலும் கூட அதை நம்பாமல் உடையையும் ரெயின் கோட்டையும் கையோடு எடுத்துச் செல்ல வேண்டும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை அதிக அளவு இருக்கும் என எதிர்பார்க்கலாம் மேலும் வங்க கடையில் சக்தி வாய்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அதற்கு புயலாகும் வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இந்த ஆண்டின் முதல் பெரிய மழை பதிவாகியுள்ளது. அதாவது 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு மழை பெய்திருக்கிறது. வானிலை செய்தியாளர்கள் இதை செஞ்சுரி என்று குறிப்பிடுவார்கள். இந்த மழை தொடரும் என்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் எனவும், சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்களில் இரவு நேரங்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பிரதீப் ஜான் தெரிவித்து இருக்கிறார். சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டு பருவங்கள் மழையை கொண்டு வரும். ஒன்று தென்மேற்கு பருவமழை. இத ஜூலை 15ம் தேதி தொடங்கி அக்டோபர் 15 வரை நீடிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கூடுதல் மழைப்பொழிவை கொடுத்திருக்கிறது. அதேபோல, அக்.16ம் தேதி அதாவது இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இது இந்த ஆண்டு கூடுதல் மழைப்பொழிவை கொண்டு வரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications