அதென்ன வெள்ளத்தில் மிதக்குது? வேகமாக போகுதே.. கலங்கி பார்த்த கந்தன்சாவடி.. சென்னை புறநகர் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் விடாமல் கொட்டி தீர்க்கும் மழையை கண்டு, பொதுமக்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.. அதிலும் புறநகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காணப்படுவது, மேலும் கலக்கத்தை உண்டுபண்ணி வருகிறது. இந்நிலையில், மழைநீர் வீடியோ ஒன்று வெளியாகி, பொதுமக்களை திகைக்க வைத்து வருகிறது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது... இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்துள்ளது. இதனால், அடுத்து வரும் நாட்களிலும் மழை தொடரும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

rain chennai kandanchavadi

சென்னையில் ரெட் அலர்ட் அறிவிப்பை தொடர்ந்து, அனைத்து துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் இறங்கியிருக்கிறார்கள்.. மழை அதிகம் பெய்யும் வாய்ப்புள்ள பகுதிகளில் தேசிய, மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். 42 தீயணைப்பு நிலையங்களில் 1,300 தீயணைப்பு படை வீரர்கள் களப்பணியில் உள்ளனர்.

மழைப்பொழிவு: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்கிறது. தாம்பரம், பல்லாவரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் காலை முதல் மழை தொடர்கிறது.

சென்னையில் நேற்று நள்ளிரவு கனமழை பலமாக கொட்டியதால் சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் மழை கொட்டி தீர்த்ததால், 5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதால், வெள்ளநீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எப்போது சென்னையில் மழை வந்தாலும், நீலாங்கரை, கொட்டிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கிவிடும்.. அதேபோல, கந்தன்சாவடி-பெருங்குடி ஓ.எம்.ஆர். சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு, ஒரு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நின்றுவிடும்.

புறநகர்: முழங்கால் அளவு தேங்கிவிடும்.. அதுபோலவே, இப்போதும் சென்னை புறநகரில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் கந்தன்சாவடி பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்து, அங்குள்ள மக்களுக்கு பெருத்த பாதிப்பை தந்துவருகிறது. இதில், ஒரு வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டதால், அந்த வீட்டிலிருக்கும் உடைமைகள் எல்லாம் மழைநீரில் அடித்து செல்வதை காண முடிகிறது.

இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.. கந்தன்சாவடி பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.. அந்த பகுதியில் எங்கு திரும்பினாலும் வெள்ளநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி காணப்படுகிறது.. அதில், வீட்டிலிருந்த ஃப்ரிட்ஜ் ஒன்று வேகமாக அடித்து செல்வதை காண முடிகிறது.. வழக்கமாக ஃபிரிட்ஜ் என்றாலே சற்று எடை அதிகமானதாக இருக்கும். ஆனால், வெள்ள நீரிலேயே கனம் மிகுந்த ஃபிரிட்ஜ் அடித்து செல்கிறது என்றால், அந்த அளவுக்கு வெள்ள நீர் வேகமாக பெருக்கெடுத்துள்ளது.

கலக்கம்: ஃப்ரிட்ஜ் போலவே, மேலும் சில வீட்டு உபயோக பொருட்கள் மழைநீரில் அடித்து செல்வதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. நேற்றிரவு பெய்த 6 செ.மீ மழைக்கே இப்படியொரு பாதிப்பு என்றால், நாளைய தினம் சென்னையில் பெய்ய போகும் மழையின் பாதிப்பு எப்படி இருக்குமோ? என்ற கலக்கம் சென்னைவாசிகளிடம் ஏற்பட்டு வருகிறது.

கந்தன்சாவடி ஓஎம்ஆர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது வெள்ளம். தேங்கி நிற்கும் மழைநீரால் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.. எனினும், மெட்ரோ பணிகள் நடப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயம்பேடு: கோயம்பேடு மெட்ரோ பாலத்துக்கு கீழே பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டிய பகுதியில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சில இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. புரசைவாக்கம் ரித்தட்கன் ரோட்டில் வழக்கம் போல தண்ணீர் தேங்கி நின்றது. ஒவ்வொரு மழைக்கும் இந்த சாலையில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையான ஒன்றாகும். அதன்படி

அயனாவரம் நூர் ஓட்டல் பஸ் நிறுத்தத்தில் இருந்து சிக்னல் வரை சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அண்ணாநகர் அண்ணா ஆர்ச் அருகே அரசு சித்த மருத்துவமனை நுழைவு வாயிலில் தேங்கி இருந்த மழைநீரை கடந்து செல்வதற்கு நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டனர். கிண்டி, நுநுங்கம்பாக்கம் ரெயில் நிலையங்களை சுற்றி உள்ள பகுதிகளும் மழை நீரால் சூழ்ந்திருந்தன. தி.நகரில் உள்ள தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் நலச்சங்க கட்டிட பகு

கனமழை: காலையில் இருந்தே பெய்த கனமழை கொட்டியதால், சென்னையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளன.. 300-க்கும் மேற்பட்ட சாலைகளில் குளம் போல மழைநீர் தேங்கி கிடக்கின்றன. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதில் அதிகாரிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+