சென்னை கனமழையால் தண்டவாளங்களில் மழைநீர்.. 4 ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
சென்னை: கனமழை காரணமாக பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் 4 ரயில்களை ரத்து செய்துள்ளது தெற்கு ரயில்வே. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல, திருப்பதியில் இருந்து சென்னை வரும் சப்தகிரி விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் சூழலில், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்னும் 12 மணி நேரத்தில் வலுப்பெற உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 17 ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோரத்தை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ரெட் அலர்ட்: இதன் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்கள் அச்சம்: ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், சென்னைவாசிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கடந்த காலத்தில் புயல் மற்றும் பெருமழை காரணமாக சென்னையில் கடுமையான மழையும், வெள்ளமும் ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
20 செ.மீட்டர் வரை மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால், பேரிடர் மீட்பு குழுக்கள், தன்னார்வலர்கள், அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அரசும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும், மழைநீர் தேங்காமல் தடுக்க தொடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
ரயில்கள் ரத்து: இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் 4 ரயில்களை ரத்து செய்துள்ளது தெற்கு ரயில்வே. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல, திருப்பதியில் இருந்து கிளம்பி சென்னை வரும் சப்தகிரி விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல்: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.35க்கு புறப்படவேண்டிய 16203 திருப்பதி விரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு வரை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மைசூர் செல்லும் காவேரி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications