சென்னையில் 100 டிகிரி நெருங்கிய வெயில்.. ஆண்டின் மிக வெப்பமான நாள் நேற்றுதானாம்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னையில் ஏறத்தாழ 100 டிகிரிக்கு நெருக்கமாக வெயில் பதிவாகியிருக்கிறது. ஆண்டின் மிக வெப்பமான நாளாக நேற்றுதான் இருந்தது என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மட்டுமல்லாது சென்னையில் நேற்று பரவலாக வெப்ப அலையின் தாக்கமும் இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடக்கத்தில் கோடைக்காலம் ஆரம்பித்துவிடும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மத்தியில் வெயில் பொளக்க தொடங்கிவிட்டது. வெயில் காரணமாக மக்கள் கடுமையாக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினத்தை பொறுத்த அளவில் 8 இடங்களில் வெயில் சதமடித்திருந்தது. குறிப்பாக சென்னையில் பதிவான வெயில், இந்த ஆண்டின் அதிகபட்ச வெயில் என்று சொல்லப்படுகிறது. மாவட்டவாரியாக பார்த்தால்..
ஈரோடு - 103.28 டிகிரி ஃபாரன்ஹீட்
பரமத்திவேலூர் - 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்
மதுரை விமான நிலையம் - 101.48 டிகிரி ஃபாரன்ஹீட்
வேலூர் - 100.56 டிகிரி ஃபாரன்ஹீட்
திருப்பத்தூர் - 100.56 டிகிரி ஃபாரன்ஹீட்
சேலம் - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட்
திருச்சி - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட்
சென்னை மீனம்பாக்கம் - 99.86 டிகிரி ஃபாரன்ஹீட்
சென்னை நுங்கம்பாக்கம் - 97.52 டிகிரி ஃபாரன்ஹீட்
என வெயில் பதிவாகியுள்ளது. இதுவரை சென்னையில் பதிவான வெயிலில், நேற்று பதிவான வெயில்தான் அதிகம். நேற்று சென்னையில் இயல்பை விட 3.6-4.3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக பதிவாகியிருக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு வெயில் இப்படித்தான் இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக இதயநோய் கொண்டவர்கள், பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு சில இடங்களில் வெப்ப அலையும் வீசியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
வெயில் அதிகமாக இருப்பதால் புறஊதாக்கதிர்களின் தாக்கமும் தீவிரமாக இருக்கும். எனவே, வெயில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் ஜன்னல்கள், கதவுகளை அடைத்து வைத்திருப்பது சிறந்தது. அதேபோல நீர் சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் நீர் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். டீ, காபியை விட பழச்சாறு எடுத்துக்கொள்வது சிறந்தது. மோர், கூழ் உள்ளிட்டவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.
வெளியில் செல்வோர் கட்டாயம் தண்ணீர் பாட்டிலை கையோடு எடுத்து செல்ல வேண்டும். அடர் நிறத்தில் ஆடைகளை அணிவதை விட, வெள்ளை, மஞ்சள் போன்ற வெளிர் நிறத்தில் ஆடைகளை அணிந்தால் வெயிலின் பாதிப்பிலிருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications