சென்னையில் இன்றைக்கு மழை இருக்கு.. வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகத்தில் பரவலாக அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "இன்றும் நாளையும் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.23 தொடங்கி 26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (21-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை சராசரியாக 300 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இது இந்த காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை விட 5 சதவீதம் அதிகமாகும். அதேபோல கோயம்புத்தூர், சென்னை, காரைக்கால், மயிலாடுதுறை, புதுச்சேரி, ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இயல்பை விட கூடுதலாகவே பெய்திருக்கிறது. இந்த மாவட்டங்களில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 255.9 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இந்த மழையானது இயல்பான மழையை விட 252 சதவீதம் அதிகமாகும்.
மறுபுறம் தூத்துக்குடி, திருப்பூர், ராமநாதபுரம், கரூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல் தர்மபுரி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இயல்பை விட குறைவாக பெய்திருக்கிறது.
தென்மேற்கு பருவமழை, கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கியிருந்தாலும், செப். 15 - 20 தேதிக்குள்தான் அதிகமான அளவு தமிழ்நாடு மழைப்பொழிவை பெற்று இருக்கிறது. நேற்று அதிகபட்சமாக அரக்கோணத்தில் 69.6 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. அதேபோல மதுரை விமான நிலையத்தில் நேற்று ஏறத்தாழ வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு எட்டி இருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தி 20 டிகிரி பாரன்ஹீட், மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 11.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருக்கிறது.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications