மதியம் 1 மணி வரை.. சென்னை முதல் குமரி வரை.. 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், நெல்லை, குமரி என 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் கூட மாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துவிடுகிறது. குறிப்பாக நேற்றும் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்தது.

மதியம் 1 மணி வரை
தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் 1 மணி வரை சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, குமரி, நாகை, திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் சாலையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை புதன்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தின் மலைப்பருதிகள், குமரி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்களில் வெளுக்க போகுது
நாளை மறுநாள் தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு (சென்டிமீட்டரில்):
* பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), ஆயிங்குடி (புதுக்கோட்டை), தென்காசி AWS (தென்காசி),அம்முண்டி (வேலூர்) தலா 8 செமீ.
* தென்காசி (தென்காசி), வாலாஜா (ராணிப்பேட்டை), நாங்குனேரி (திருநெல்வேலி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) தலா 7 செமீ.
* வேலூர் (வேலூர்), கடலூர் (கடலூர்), ஆற்காடு (ராணிப்பேட்டை), அரண்மனைப்புதூர் (தேனி). கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) தலா 6 செமீ.
* குன்னூர் PTO (நீலகிரி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), தேவகோட்டை (சிவகங்கை). கருப்பாநதி அணை (தென்காசி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), குன்னூர் AWS (நீலகிரி) தலா 5 செமீ மழை பெய்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications