சென்னை மக்களே.. நைட் வெளியே வராதீங்க! மொத்தம் 29 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்னர் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டு வடக்கிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதேபோல மழையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக சென்னை உட்பட 29 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், மதுரை, ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒரு சில இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications