இரவில் பறந்த அந்த ஆர்டர்.. 2015-ல் திகைக்க வைத்த செம்பரம்பாக்கம்.. இப்ப வெளிவரும் உண்மை
சென்னை: கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன என்பது குறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தற்போது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டை சூழ்ந்த வெள்ளத்தால் வாங்கி வைத்த பொருட்கள் எல்லாம் வீணாகிவிட்டன. அது போல் சிறு சிறு பெட்டிக் கடைகளில் கூட மளிகை பொருட்கள் எல்லாம் வீணாகிவிட்டன.

வீட்டில் மின் சாதன பொருட்கள் நீரில் மூழ்கி, காயலான் கடைக்குகூட போட முடியாத சூழல் எழுந்துள்ளது. தற்போது இந்த அளவுக்கு மழை பெய்யும் என மக்கள் யாரும் நினைக்கவில்லை, அதுதான் இத்தனை பாதிப்புக்கு காரணம்.
இந்த மழையை 2015 பெருவெள்ளத்துடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். தற்போது வந்த புயலே பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் வடகிழக்கு பருவமழையே இன்னும் முடியாமல் இருக்கும் போது இனி அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் அவர்களுக்கு எழுந்துள்ளது. மேலும் தற்போது கீழ் தளத்தில் குடியிருக்கக் கூட ஆட்கள் வராமல் வீட்டு உரிமையாளர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
மற்ற தளங்களுக்கு எல்லாம் போட்டா போட்டி நிலவுகிறது. அது போல் வீட்டை வாங்கும் போதும் கூட மேல் தளங்களையே மக்கள் விரும்புகிறார்களே தவிர கீழ் தளத்தை அல்ல. இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளம் குறித்து பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் உள்ளன.
இதுகுறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் அதீத மழை பெய்தது. ஏற்கெனவே அந்த ஏரியில் நவம்பப் 30ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து மழை பெய்து வந்தது. அப்படி பார்த்தால் 36 முதல் 48 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது. அதில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் தற்போது வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வரை அதிகரித்துள்ளதால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் என 2015 டிசம்பர் 1 ஆம் வெளியான அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அந்த அறிவிப்பு மிகவும் தாமதம். இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் 2.12.2015 ஆம் தேதி அதிகாலை தண்ணீரின் அளவு அபாய அளவை தாண்டியது. ஏற்கெனவே அந்த ஏரியில் 2016ஆம் ஆண்டு கோடை காலத்தையொட்டி 85 சதவீதம் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது.
What happened in Chembrambakkam lake during December 2015?
— Chennai Weather-Raja Ramasamy (@chennaiweather) December 12, 2023
Extreme rains(475 mm for 24 hours ending 2 Dec'2015 8:30 am)in lake and it was raining even before that(30th November 6 pm onwards) . So almost raining for more than 36-48 hours ....
They did announcement in 1.12.2015… pic.twitter.com/7RUudC6JGh
இந்த நிலையில் பெரு மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை திறந்துவிடும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டார்கள். இதனால் ஏரியில் நீர் பாயும் திசையில் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த சூழல் குறித்து பலருக்கு தெரியாது. இதனால் ஏரி திறப்பு விவகாரத்தை மக்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
மேக வெடிப்பு போன்ற மழையால் தண்ணீரின் அளவுக்கு அபாய கட்டத்தை எட்டிவிட்டால் அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த ஆண்டை எடுத்துக் கொண்டால் 76 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு இருந்தது. ஆனால் நகரில் பெய்த பெரு மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள அபாயம் குறித்த விழிப்புணர்வு 2015 ஐ விட தற்போதுதான் மக்களுக்கு அதிகரித்துள்ளது என சென்னை வெதர் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications