பாஸ்ட் இஸ் பாஸ்ட்! இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா? அதுவும் இடி மின்னலுடன்! சென்னை ரெயின்ஸ்!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்த நிலையில் இன்றைய தினம் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து சென்னை ரெயின்ஸ் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு திசை வேறுபாடு காரணமாக சென்னையில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் வடபழனி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னையில் வெப்பம் அதிகரித்தது. 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய நிலையில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் புழுக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மாலைக்கு மேல் பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால், மீனவர்கள் மூன்று நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. சென்னையை பொருத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் மழை இருக்குமா இருக்காதா எங்கெல்லாம் இருக்கும் என்பது குறித்து சென்னை ரெயின்ஸ் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருக்கிறது. இதுகுறித்து சென்னை ரெயின்ஸ் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தென் தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.
இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இன்றைய தினம் கடலூர் முதல் மகாபலிபுரம் வரையுள்ள கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் புதிய புதிய காற்று உருவாவதுதான் மழைக்கு காரணம் என்றும சொல்லப்படுகிறது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications