பேய் மழை காத்திருக்கு.. புயல் எச்சரிக்கையால் ரத்து செய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சி!
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நாளை மறுநாள் புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 790 கிலோமீட்டர் கிழக்கு தெற்கு திசையில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 3-ஆம் தேதி புயலாக வலுப்பெற்று 4-ஆம் தேதி மாலை கரையை கடக்க உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் 3ஆம் தேதி புயலாக வலுப்பெற்று 4ஆம் தேதி மாலை கரையை கடக்க உள்ளது என்றும் தெற்கு ஆந்திரா வட தமிழகத்தில் சென்னைக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் எனவும் கூறப்பட்டது. இதனிடையே சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில் வங்கக்கடலில் உருவாகும் புயல் 5ஆம் தேதி முற்பகலில் ஆந்திராவின் நெல்லூர் - மசூலிபட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக 4ஆம் தேதி மாலை புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புயல் எச்சரிக்கையால் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் 2ஆம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.
தற்போது, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை சென்னையில் புயல், கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 2ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications