சென்னையை புரட்டிப்போட்ட பெருமழை.. வடியாத வெள்ளத்தால் வாடிய மக்கள்.. உதவிக்கரம் நீட்டிய முதல்வர்
சென்னை: தென் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவிக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின், நிவாரண பொருட்களை வழங்கினார். அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
மிக்ஜாம் புயல் வங்கக்கடலில் மையம் கொண்டதால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை இரவு வரைக்கும் இரண்டு நாட்களில் 73 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை கொட்டித் தீர்த்தது.

சென்னையில் 3 மாதங்களில் பெய்யக்கூடிய மழை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணையில் மட்டுமே 2 நாட்களில் வரலாற்றில் கேள்விப்படாத வகையில் 73 செ.மீ. அளவுக்கு பெய்து மக்களை நிலை குலைய வைத்துள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. உண்ண உணவு இன்றி குடிக்க தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றன. மின்சாரம் இல்லை, செல்போன்களில் சிக்னல் கிடைக்காத காரணத்தால் யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நேற்றைய தினம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு நேரில் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை கேட்டறிந்து வேண்டிய வசதிகளை செய்துகொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதேபோல், மழைநீரை அகற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூடிய விரைவில் இயல்புநிலை திரும்பும் என பொதுமக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அங்குள்ள மருத்துவர்களிடம் புயலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார்.
முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, போர்வை, பாய் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் யானைகவுனியில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து, மழைநீரை அகற்றிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, யாரும் கவலைப்பட தேவையில்லை என்று தெரிவித்து, அவர்களுக்கு உணவு, போர்வை, பாய் ஆகியவற்றை வழங்கினார்.
இதனிடையே பெரு மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது தரமணி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், தாம்பரம், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். மொட்டை மாடியில் தஞ்சமடைந்துள்ளனர். இன்றைய தினம் தரமணி, பெருங்குடி உள்ளிட்ட மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். போர்வை, அரிசி, பிஸ்கட், ஆவின் பால் பவுடர் போன்ற பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி ஆறுதல் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications